எர்ணாகுளம்- டாடா நகர் எக்ஸ்பிரஸ் ரெயிலில், போத்தனூரில் இருந்து சென்னை பெரம்பூர் ரெயில் நிலையத்துக்கு செல்லும் போது முன்பதிவு பெட்டிகள் ழுழுவதையும் வடமாநிலத்தவர்கள் ஆக்கிரமித்துக் கொள்கின்றனர். கழிவறையை சுற்றியும் அமர்ந்துக் கொண்டு முன்பதிவு செய்த பயணிகள் கழிவறை செல்ல முடியாத அளவு இடயூறாக உள்ளனர். டிக்கெட் பரிசோதகர்கள் அபாரத நடவடிக்கை எடுக்கிறார்கள். ஆனால், தொடர்ந்து முன்பதிவு பெட்டியிலேயே பயணம் செய்ய அனுமதிக்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். முன்பதிவு ரெயில் பயணிகள் நிம்மதியான பயணத்தை மேற்கொள்ள ரெயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.