சென்னை எம்.கே.பி. நகர் முதலாவது பிரதான சாலையில் மரம் ஒன்று சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களுக்கு இடையூறாக இருந்தது. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக வந்து வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், துணை நின்ற ‘தினத்தந்தி‘-க்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்தனர்.