ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் 6 லிப்ட்டுகள் உள்ளன. ஆனால் இவற்றில் நான்கு உபயோகத்தில் இல்லை மீதமுள்ள இரண்டு லிப்ட்டுகளும் சரிவர இயங்காததால் நோயாளிகள், வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து அனைத்து லிப்ட்டுகளையும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.