மங்கலம்பேட்டையில் துணை வேளாண்மை விரிவாக்க மையம் கட்டிமுடிக்கப்பட்டு 6 மாதம் ஆகியும் அதனை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அந்த கட்டிடம் சேதமடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது. மேலும் அரசின் நலத்திட்ட உதவிகளை முறையாக பெற விவசாயிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே பூட்டிக்கிடக்கும் துணை வேளாண்மை விரிவாக்க மையத்தை விரைந்து திறக்க வேண்டும்.