சென்னை புழல் கேம்ப் சிக்னல் அருகே அரசு பள்ளி அமைந்துள்ளது. மேலும் இந்த சாலையில் தனியார் பள்ளியும் இயங்கி வருகிறது. எனவே காலை மற்றும் மாலை வேளையில் இந்த சாலை பரபரப்புடன் இருக்கும். ஆனால் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாகவும், அச்சுறுத்தும் வகையில் மாடுகள் நடமாட்டம் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதி அடைகின்றனர். மேலும், சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளால் விபத்துகள் அவ்வப்போது அரங்கேறுகின்றன. இதில் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.