வாகன ஓட்டிகள் சிரமம்

Update: 2024-02-04 13:34 GMT

சென்னை நுங்கம்பாக்கம், காம்தார் நகர் முதல் தெருவையும், வைகுண்டபுரம் 2-வது தெருவையும் இணைக்கும் சந்திப்பு உள்ளது. இந்த பகுதியில் சில நாட்களுக்கு முன்பு மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நடந்து முடிந்தது. ஊழியர்கள் பணி நடந்த பின்னர் சாலையை அப்படியே விட்டு விட்டு சென்று விட்டார்கள். இதனால் அங்கு பள்ளமும், மேடுமாய் உள்ளது. இதனால் மாணவர்கள், முதியவர்கள், வாகன ஓட்டிகள் என அனைவரும் சிரமப்படுகின்றனர், இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்