நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்படுமா?

Update: 2024-02-04 12:53 GMT

மலைக்கோவிலூர் அருகே பாரதிநகரில் பழமை வாய்ந்த சிவசக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு மலைக்கோவிலூர் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதி மக்களும் மற்றும் வெளியூர்களில் இருந்து தங்கள் வேண்டுதலுக்காக ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இக்கோவில் வளாகத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து மின்மோட்டார் பொருத்தி நீர்த்தேக்க தொட்டி அமைத்தால் இக்கோவிலுக்கு வரும் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்