சென்னை அடையாறு, இந்திரா நகர், சி.எஸ். காலனியில் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு புதிய ரேசன் கடை கட்டி முடிக்கப்பட்டது. ஆனால், இதுவரை திறக்கப்படாமல் உள்ளது. எனவே, அந்த பகுதி மக்கள் ரேஷன் கடைக்கு செல்ல வெகுதூரம் செல்ல வேண்டியதுள்ளது. இதனால், வயதானவர்கள், கர்ப்பிணிகள் என அனைவரும் சிரமப்படுகிறார்கள். எனவே, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் ரேசன் கடை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.