சங்கரன்கோவில் தாலுகா பந்தப்புளி பஞ்சாயத்து பி.ரெட்டியபட்டி வடக்கு தெருவில் பொதுக்கிணறு பராமரிப்பற்று புதர்மண்டி கிடக்கிறது. கிணற்றுக்குள் உள்ள தண்ணீர் மாசடைந்து குப்பைக்கூளமாக காட்சியளிக்கிறது. கொசுக்களும் உற்பத்தியாகி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே பொதுக்கிணற்றுக்கு மூடி அமைத்து சுத்தமாக பராமரித்து மீண்டும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.