திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் ரெயில் நிலையம் அருகே சுரங்க பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருவதால் அந்த பகுதி மக்கள் பெரிதும் அவதிப்படுகிறார்கள். இதனால் தண்டவாளங்களை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும், பொதுமக்கள் ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடந்து செல்கின்றனர். உயிர் சேதம் ஏற்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.