விழும் நிலையில் மரம்

Update: 2024-01-21 12:49 GMT

சென்னை அண்ணாநகர், எஸ்.பி.ஓ.ஏ. பள்ளி மற்றும் இளநிலை கல்லூரி கிழக்கு வாசல் சாலையில் ஆபத்தான நிலையில் மரம் ஒன்று உள்ளது. மிகப் பழமையான மரம் என்பதால், எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளது. எனவே, இந்த பகுதி வழியாக மக்கள் அச்சத்துடனே கடந்து சென்று வருகின்றனர். பலமுறை உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கபட வில்லை. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து மரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்