ஊட்டியில் பிரதான கால்வாயாக கோடப்பமந்து கால்வாய் உள்ளது. இந்த கால்வாய், பல இடங்களில் புதர் மண்டி காணப்படுகிறது. இதனால் நீரோட்டம் தடைபடுகிறது. இந்த கால்வாயை தூர்வார நிதி ஒதுக்கியும், எந்த பணியும் இதுவரை தொடங்கப்படாமல் உள்ளது. இதனால் கனமழை பெய்யும்போது வீடுகள் மற்றும் விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகும் அபாயம் நிலவுகிறது. எனவே கோடப்பமந்து கால்வாயை விரைவாக தூர்வார சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.