வேலாயுதம்பாளையம் ஹைஸ்கூல்மேடு தட்டாங்காடு பகுதியில் ஆண், பெண் இருபாலருக்கான பொதுக்கழிவறை உள்ளது. இந்த கழிவறையில் சுவர்கள் இடிந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனை உடனடியாக சரிய செய்ய வேண்டும் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இந்த செய்தியின் எதிரொலியாக நகராட்சி அதிகாரிகள் அந்த பழைய கழிவறையை அகற்றி, புதிதாக ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியாக கழிவறை கட்டி பயன்பாட்டிற்கு விட்டனர். இதனால் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினந்தந்தி புகார் பெட்டிக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.