நடவடிக்கை தேவை

Update: 2024-01-21 09:00 GMT

மார்த்தாண்டம் அருகே நல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கோதேஸ்வரம் பத்ரகாளி அம்மன் கோவிலும், அதன் அருகில் தெப்பக்குளமும் உள்ளது. இந்த தெப்பக்குளத்து தண்ணீரை புனிதநீராக எடுத்து கோவிலில் தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருவதுடன், திருவிழா காலங்களில் ஆராட்டு நிகழ்ச்சியும் இங்கு நடக்கிறது. தற்போது இந்த தெப்பக்குளம் முறையாக பராமரிக்காததால் செடிகள் வளர்ந்து காணப்படுகிறது. ேமலும் தூய்மைபடுத்தும் பணியாளர்கள் கோவிலை சுற்றியுள்ள குப்பைகளை சேகரித்து குளத்திற்குள் தள்ளிவிடுகின்றனர். இதனால் குளம் மாசடைந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தை தூர்வாரி தூய்மைபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்