திருவள்ளுர் மாவட்டம், பல்லாவரம் பூவிருந்தமல்லியை இணைக்கும் பிரதான சாலை பம்மல் மெயின் ரோடு. இந்த பகுதியில் மாடுகள் நடுரோட்டில் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றன. மேலும், சாலையின் குறுக்கே திடீரென ஓடுவதால் அடிக்கடி வாகன விபத்துக்களும் ஏற்படுகின்றது. மாநகராட்சி அதிகாரிகள் சாலைகளில் அலைந்து திரியும் மாடுகளை பிடிக்க நடவடிக்கை எடுப்பார்களா?