தொற்றுநோய் பரவும் அபாயம்

Update: 2024-01-07 12:33 GMT


நாகை ஆயுதப்படை மைதானம் போலீஸ் குடியிருப்பு அருகே பாதாள சாக்கடையிலிருந்து கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. இந்த பகுதியில் குடியிருப்புகள் உள்ளதால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பாதாள சாக்கடை கழிவு நீரை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், நாகை

மேலும் செய்திகள்