காஞ்சீபுரம் மாவட்டம், மாங்காடு நகராட்சிக்கு உட்பட்ட சாந்தி நகர் பகுதியில் உள்ள ஏரிக்கரையில் கடந்த ஒரு மாதங்களாக மாடு ஒன்று இறந்து கிடக்கிறது. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இறந்த மாட்டை அப்புறப்படுத்தினர். உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், துணை நின்ற ‘தினத்தந்தி‘-க்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.