சென்னை அடையாறு, வெங்கடரத்தினம் நகரில் கடந்த ஒரு மாதமாக தெருவிளக்கு எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் திருட்டு நடக்க வாய்ப்புள்ளது, மேலும் இந்த பகுதி வழியாக மக்கள் இரவு நேரத்தில் செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர். இந்த சாலையில் அடையாறு ஆரம்ப சுகாதார மருத்துவமனை மற்றும் விநாயகர் கோவில் அமைந்துள்ளது, மக்கள் அதிகம் பயன்படுத்தும் பகுதி என்பதால் மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.