சென்னை அண்ணாநகர் மேற்கு, அய்யப்பன் கோவில் அருகே உள்ள ஒய் பிளாக் 8-வது தெருவில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் குப்பைகள் கொட்டப்பட்டிருந்தது. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக வந்து நடவடிக்கை எடுத்தார்கள். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், துணை நின்ற ‘தினத்தந்தி‘-க்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.