உளுந்தூர்பேட்டை பாலையப்பட்டு அங்காளம்மன் கோவில் ஆர்ச் அருகில் சாலையில் மீன்லோடு இறக்கப்படுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மூக்கை மூடிக்கொண்டு செல்லும் நிலை உள்ளது. எனவே மீன்லோடுகளை வேறு இடத்தில் இறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.