விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுகா எரிச்சநத்தம் மெயின் ரோட்டில் மழைநீர் செல்ல வழி இல்லாமல் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் மற்றும் கொசு தொல்லையும் அதிகமாக உள்ளது. மேலும் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.