திருக்கனூர் கடைவீதிக்கு சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். ஆனால் பொது கழிப்பிடம் இல்லாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக பெண்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். எனவே கடைவீதியில் பொதுகழிப்பறை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.