சேதமடைந்த பள்ளி கழிப்பறை கட்டிடம்

Update: 2023-12-24 17:43 GMT
விக்கிரவாண்டி அருகே வாக்கூர் பகண்டை கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இங்குள்ள ஆண்கள் கழிப்பறை கட்டிடம் பலத்த சேதமடைந்தும், தகுந்த பராமரிப்பு இல்லாமலும் காணப்படுகிறது. இதனால் இந்த கழிப்பறையை பயன்படுத்தும் மாணவர்களுக்கு பலவித தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிப்பறை கட்டிடத்தை சீரமைக்க வேண்டியது அவசியமாகும்.

மேலும் செய்திகள்