செஞ்சி-அனந்தபுரம் செல்லும் வழியில் உள்ள அத்தியூர் காட்டுப்பகுதியில் சாலையின் இருபுறமும் முட்புதர்கள் அதிக அளவில் வளர்ந்துள்ளன. இதனால் சாலையே தற்போது தெரியவில்லை. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சாலையை மறைத்து வளர்ந்துள்ள முட்புதர்களை வெட்டி, அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.