போடி அருகே குரங்கணி மலைப்பகுதிக்கு இருசக்கர வாகனங்களில் போக்குவரத்து விதிமுறையை மீறி 3 பேர் செல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதில், பலர் செல்பி, புகைப்படங்கள் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதற்காக இரு சக்கர வாகனங்களில் செல்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே விதியை மீறி இருசக்கர வாகனங்களில் செல்வோர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.