அரசு மருத்துவமனையில் ஊழியர்கள் பற்றாக்குறை

Update: 2023-12-24 13:46 GMT
பெரம்பலூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதால், உள்நோயாளியாகவும் தங்கியிருந்தும், புறநோயாளியாகவும் நிறைய பேர் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். ஆனால் போதிய அளவு ஊழியர்கள் இல்லாததால் நோயாளிகளுக்கு டாக்டர்களால் தகுந்த சிகிக்சை அளிக்க முடியவில்லை. ஊழியர்கள் செய்ய வேண்டிய வேலைகளை செவிலியர்கள் செய்ய வேண்டியிருக்கிறது. எனவே மருத்துவமனைக்கு தேவையான அளவு ஊழியர்களை நியமிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்