காஞ்சீபுரம் மாவட்டம், மாங்காடு நகராட்சிக்கு உட்பட்ட சாந்தி நகர் பகுதியில், செம்பரம்பாக்கம் உபரி நீர் செல்லக்கூடிய ஏரி உள்ளது. அந்த ஏரிக்கரையில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக மாடு ஒன்று இறந்து கிடக்கிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் அந்த பகுதியில் அதிக அளவு துர்நாற்ற வீசுகிறது. நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.