சென்னை நுங்கம்பாக்கம், ரெயில்வே பார்டர் ரோட்டில் கழிவுநீர் குளம் போல் தேங்கி உள்ளது. கழுவுநீர் மூடி சேதம் அடைந்ததால் இந்த அவலம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி மக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. மேலும் துர்நாற்றம் வீசுவதால் அந்த பகுதியாக யாரும் கடந்து செல்ல முடியவில்லை. அதிகமாக மக்கள் செல்லும் இடம் என்பதால் மாநகராட்சி அதிகாரிகள் கழுவுநீரை அகற்ற உடனடி நடிவடிக்கை எடுக்க வேண்டும்.