சென்னை மணலி, பெரிய சேக்காடு ராஜா நகரில் உள்ள 2 மின்கம்பங்கள் மிகவும் சிதிலமடைந்து உள்ளது. இதனால், அந்த பகுதியாக செல்பவர்கள் தங்கள் மேல் விழுந்து விடுமே என்ற அச்சத்துடனே செல்கின்றனர். மேலும், மழை காலம் என்பதால் மின்வாரிய அதிகாரிகள் ஆபத்தை உணர்ந்து புதிய மின் கம்பத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.