விழுப்புரம் அருகே பாணாம்பட்டு கிராமம் 42-வது வார்டு ஆதிதிராவிடர் காலனியில் உள்ள அம்பேத்கர் தெருவில் பாதாள சாக்கடை மூடி சேதமடைந்து காணப்படுகிறது. இதில் உள்ள சிமெண்டு பூச்சுகள் உடைந்து கம்பிகள் வெளியே தொிவதால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடனேயே செல்கின்றனர். எனவே பாதாள சாக்கடை மூடியை புதிதாக மாற்றித்தர வேண்டும்.