அரசூரில் போலீஸ் நிலையம் இல்லை. இதனால் அப்பகுதியில் ஏதேனும் குற்றச்சம்பவங்கள் நடந்தால், பொதுமக்கள் வெகுதூரம் சென்று, போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டிய நிலை உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே அரசூரில் புதிய போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாகும்.