வேப்பூா் தாலுகா சேப்பாக்கம் பகுதியில் உள்ள கால்நடை ஆஸ்பத்திரி கட்டிடம் பல ஆண்டுகளாக பயன்பாடின்றி காட்சிப்பெருளாக உள்ளது. தற்போது இந்த கட்டிடத்தில் சிலர், மாடுகளை கட்டி வைத்துள்ளனர். இதனால் ஆஸ்பத்திரி கட்டிடம் மாட்டுத்தொழுவம் போல் காட்சியளிக்கிறது. மேலும் 40 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கட்டிடம் கட்டப்பட்டதால், பலத்த சேதமடைந்து விழும் நிலையில் உள்ளது. எனவே கால்நடை ஆஸ்பத்திரி கட்டிடத்தை இடித்துவிட்டு, புதிதாக கட்டி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.