வாரச்சந்தையை சீரமைக்க வேண்டும்

Update: 2023-12-10 16:42 GMT

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி பஸ் நிலையத்தை ஒட்டி வாரந்தோறும் செவ்வாய்கிழமைகளில் சந்தை கூடுகிறது. இந்த சந்தையில், கால்நடைகள், காய்கறிகள், விவசாய இடுபொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கடைகள் அமைக்கப்பட்டு வியாபாரம் நடைபெறுகிறது. இந்த சந்தையின் வளாகம் சேதமைடந்து முறையான பராமரிப்பு இல்லாமல் காணப்படுகிறது. இதனால் பெரும்பாலான சந்தை வியபாரிகள் நல்லம்பள்ளி பஸ் நிலையம், அதனை சுற்றியுள்ள பகுதிகளை ஆக்கிரமித்து வியபாரம் செய்து வருகின்றனர். எனவே இந்த சந்தையை சீரமைத்து முறையாக பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரமேஷ், நல்லம்பள்ளி.

மேலும் செய்திகள்