ராமநாதபுரம் நகரை ஒட்டியுள்ள சக்கரக்கட்டி கண்மாயில் கருவேல மரங்கள் அடர்த்தியாக வளர்ந்து காணப்படுகிறது. இதனால் கண்மாயில் தண்ணீரை முழுமையாக சேமித்து நிலத்தடி நீரை பாதுகாக்க இயலாத நிலை உள்ளது. எனவே கருவேல மரங்களை அகற்றி கண்மாயை தூர்வார சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.