சென்னை அடையாறு, இந்திரா நகர், 14-வது தெரு கானல் பேங்க் சாலையில் அமைந்துள்ள பொதுகழிப்பிடம் கடந்த 7 ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ளது. அந்த பகுதியில் மசூதி மற்றும் பஸ் நிறுத்தம் உள்ளதால் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். எனவே, மாநகராட்சி அதிகாரிகள் பொதுகழிப்பிடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.