மழைநீர் வடிகால்வாய் சரிசெய்யப்படுமா?

Update: 2023-12-10 13:33 GMT

சென்னை மாதவரம், ஜி.எம்.டி. சாலையில் உள்ள மழைநீர் வடிகால் வாய் உடைந்ததால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். சாலைக்கு மிக அருகில் உள்ளதால், இரவு நேரங்களில் சாலையில் செல்லும் பொதுமக்கள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது. இதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்