பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும் இவர்கள் வரும் வாகனங்கள் மற்றும் இவர்களை பார்க்க வரும் பொதுமக்கள் தங்களின் வாகனங்களில் வரும்போது அவற்றை நிறுத்துவதற்கு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் இருசக்கர வாகன நிறுத்தும் இடத்தில் மேற்கூரை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் அவர்கள் வரும் வாகனங்கள் வெயில் மற்றும் மழையில் நின்று வீணாகி வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இரு சக்கர வாகனம் நிறுத்தும் இடத்தில் மேற்கூரை அமைத்து தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.