பெரம்பலூர் வேப்பந்தட்டை பிரம்மதேசம் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பொது சுகாதார வளாகம் அமைக்கப்படாமல் உள்ளதால் இப்பகுதியில் உள்ள சிறுமிகள், பெண்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.