திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம் பாலகிருஷ்ணம்பட்டி பேரூராட்சி பி.மேட்டூரில் ஏராளமான குரங்குகள் சுற்றித்திரிகின்றன. இவை இப்பகுதியில் உள்ள ஓட்டு வீடுகளின் ஓடுகளை பிரித்து வீட்டின் உள்ளே சென்று உணவு பொருட்களை எடுத்துச்சென்று விடுகின்றன. மேலும் இப்பகுதியில் உள்ள கடைகள் மற்றும் திறந்து இருக்கும் வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை எடுத்துச்சென்று விடுகின்றன. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.