கரூர் மாவட்டம் சேமங்கி எம்.ஜி.ஆர்.நகர் அருகே செல்வநகர் பகுதியில் உள்ள பெண்களின் நலன் கருதி சுகாதார கழிப்பிட வளாகம் கட்டப்பட்டுள்ளது. இந்த சுகாதார வளாகம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது பராமரிப்பு இன்றி சிதிலமடைந்து காணப்படுகிறது. தற்போது இந்த சுகாதார வளாகம் பூட்டப்பட்டுள்ளதால் இப்பகுதி பெண்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.