பல்லடம் பஸ் நிலையத்தில் உள்ள கட்டண சுகாதார வளாகம் கடந்த 10 நாட்களுக்கு மேலாக பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காக பூட்டப்பட்டுள்ளது. இதனால் வெளியூர் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இலவச சுகாதார வளாகத்தில் போதுமான சுகாதாரம் இல்லாததால் பயணிகள் கட்டண சுகாதார வளாகத்தை தேடி வருகின்றனர். எனவே பராமரிப்பு பணிகளை விரைவாக முடித்து சுகாதார வளாகத்தை திறக்க வேண்டும்.