நாங்குநேரி யூனியன் முனைஞ்சிப்பட்டி பஞ்சாயத்து மேல முனைஞ்சிப்பட்டி வடக்கு, தெற்கு தெருவில் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. அதில் மழைநீர் தேங்கியதால் சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. எனவே அங்கு சாலை, வாறுகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.