பொதுகழிவறை கட்டிடம் தேவை

Update: 2023-12-03 10:11 GMT

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியம் போழக்குடி ஊராட்சி திருமெய்ஞானம் கீழ வீதியில் பயன்பாடில்லாத பள்ளி கழிவறை கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தை சுற்றி தற்போது செடி,கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காட்சி அளிக்கிறது. இதன்காரணமாக கழிவறை கட்டிடம் விஷப்பூச்சிகளின் கூடாரமாக விளங்கிவருகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ளவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே,, பயன்பாடின்றி இருக்கும் கழிவறை கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும். புதிதாக அந்த பகுதியில் பொது கழிவறை கட்டிடம் அமைத்து தர வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் எதிர்ப்பார்ப்பாகும்.




மேலும் செய்திகள்