சுகாதார சீர்கேடு

Update: 2023-12-03 07:39 GMT

கணபதிபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட மேற்கு கடற்கரை சாலையில் ஸ்ரீகிருஷ்ணாபுரம் உள்ளது. இந்த பகுதியில் இரவு நேரம் சிலர் இறைச்சி கழிவுகளை கொண்டு வந்து கொட்டி விட்டு செல்கின்றனர். இதனால், அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, அந்த பகுதியில் கொட்டப்பட்டுள்ள இறைச்சி கழிவுகளை அகற்றுவதுடன் அதை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்

அபாய கிணறு