வாகன ஓட்டிகள் அவதி

Update: 2023-12-03 07:25 GMT

கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலை எப்போதும் வாகன போக்குவரத்துடன் பரபரப்பாக காணப்படும். இந்த சாலையில் அமைந்துள்ள கொட்டாரம், அச்சன்குளம் ஊர்களுக்கு இடைப்பட்ட பகுதியில் ஆடுகள் கூட்டமாக நெடுஞ்சாலையில் சுற்றித்திரிவதும், படுத்து ஓய்வெடுப்பதுமாக இருந்து வருகின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து இடையூறு ஏற்படுவதுடன் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சிலநேரங்களில் விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே, சாலையில் சுற்றித்திரியும் ஆடுகளால் ஏற்படும் விபத்தை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்