திருச்சி புத்தூர் முத்து ராஜா தெருவில் திருச்சி மாநகராட்சி சார்பில் அந்த பகுதி பொதுமக்கள் பயன்பாட்டுக்காக ரூ.49 லட்சத்தில் நவீன பொதுக்கழிப்பிட கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. இந்த கட்டிடம் தற்போது வரை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படாமல் உள்ளது. மேலும் இந்த பகுதியில் பொதுமக்கள் அதிகளவில் உள்ள நிலையில் விரைவில் இந்த பொது கழிப்பிட கட்டிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.