சங்கராபுரம் அருகே அரசம்பட்டு, பூட்டை காப்புக்காடு வழியாக பாவளம் செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலம் பலத்த சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் பாலம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால், இதை கடந்து செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சப்படுகின்றனர். எனவே சேதமடைந்த தரைப்பாலத்தை இடித்துவிட்டு, புதிதாக கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்கின்றனர்.