திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சி 28-வது வார்டு, திருமுல்லைவாயல் காளிகாம்பாள் நகர், காவேரி தெருவில் உள்ள மின்கம்பம் அடிபாகம் சிதலமடைந்து எலும்புக்கூடு போல் காட்சியளிக்கிறது. மழைக்காலத்தில் முறிந்து விழும் அபாயம் உள்ளது. அதற்கு முன் இதனை உடனடியாக மாற்றி புதிய மின்கம்பத்தை மின்வாரியம் அமைக்குமா?