கணபதிபுரம் ஊரில் பதிவுதுறை அலுவலகத்துக்கு எதிரே ஒரு தெரு உள்ளது. இந்த தெருவில் மழைநீர் வடிகால் ஓடை அமைக்கப்படாமல் காணப்படுகிறது. இதனால், மழை நேரங்களில் அந்த தெருவில் வெள்ளம் சூழ்ந்து நிற்பதால் பாசாரிகள், பள்ளி மாணவ-மாணவிகள் கடந்து செல்ல பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, அந்த தெருவில் மழை வெள்ளம் வடிந்தோட வடிகால் ஓடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-லெட்சுமி, கணபதிபுரம்.