செஞ்சி அருகே மேல்சேவூர் கிராமம் மேற்கில் விவசாய நிலங்களுக்கு செல்லும் பாதையை தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் வழிப்பாதை இல்லாமல் விவசாயிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றி பாதையை மீட்டுத்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.